போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!
பாகிஸ்தான் மக்களும் நம்மைப் போன்றவர்களே: விஜய் ஆண்டனி என்ன சொல்ல வருகிறார்?
பாகிஸ்தான் மக்களும் நம்மைப் போன்றவர்களே என்று இசையமைப்பாளரும் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதல் குறித்து இன்று(ஏப். 27) அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதில், காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறியிருப்பதாவது: “பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், அங்குள்ள பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள்.
வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.