பாலியல் வழக்கில் டிரம்ப்புக்கு சிறையில்லை; சிக்னல் கொடுத்த நீதிபதி!
டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் விசாரணை வருகிற 10 ஆம் தேதியில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்க நடிகை பாலியல் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, நடிகையை அமைதிப்படுத்துவதற்காக, தனது வழக்குரைஞரிடம் பணம் கொடுத்து, நடிகையிடம் கொடுக்கச் சொல்லியுள்ளார், டிரம்ப். மேலும், வழக்குரைஞர் கட்டணம் என்று பொய்கூறி, பொய்க்கணக்கு காட்டியுள்ளார். அமெரிக்கச் சட்டப்படி, பொய்க்கணக்கு காட்டுவது குற்றமே. இதனால், அவர்மீது 34 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் வருகிற 10 ஆம் தேதியில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாலேயே அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதில் டிரம்ப் மும்முரம் காட்டியதாகவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும், அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், தற்போது அவருக்கு சிறைத் தண்டனையைவிட அபராதம் மட்டுமே விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, டிரம்ப்புக்கு சிறைத் தண்டனை, நன்னடத்தை சோதனை அல்லது அபராதம் விதிக்க மாட்டேன் என்று நீதிபதி சமிக்ஞை செய்தார்,
இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்து வரும் டிரம்ப், குற்றச்சாட்டைச் சட்டவிரோதமான அரசியல் தாக்குதல் என்றும், ஒரு மோசடி நகைச்சுவை என்றும் விமர்சித்துள்ளார்.