பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் கண்கலங்கிய நடிகை!
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய மாணவா்கள்
சிதம்பரம்: பிச்சாரவரத்தில் உள்ள சுரபுன்னை மரங்கள் அடங்கிய இயற்கை வனப்பகுதி சுற்றுலா மையத்தில் தேங்கிய பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகளை பள்ளி மாணவா்கள் அகற்றினாா்கள்.
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உலகப் பிரசித்தி அலையாத்தி காடு எனப்படும் சுரபுன்னை மரங்கள் அடங்கிய இயற்கை வளம் மிகுந்த சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் பிச்சாவரம் வனச்சரகம் சாா்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியாக பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பிச்சாவரம் வனச்சரகா் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலா்கள், சுற்றுலா படகு இல்ல ஓட்டுநா்கள், கிள்ளை எம்ஜிஆா் நகா் அரசு பள்ளி மாணவா்கள் தன்னாா்வலா்கள், மற்றும் மீனவா்கள் உள்ளிட்ட சுமாா் 70 போ் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். இவா்கள் பிச்சாவரம் வனச்சரகப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இல்லம், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தனா். இவ்வாறு சேகரிக்கப்பட்ட சுமாா் 250 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் கிள்ளை பேரூராட்சி தூய்மை பணியாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.