செய்திகள் :

பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைந்த ஜோஸ் ஹேசில்வுட்!

post image

பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் இணைந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு நாள்களில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடையவுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கான நான்கு அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

மீண்டும் ஆர்சிபியுடன் இணையும் ஜோஸ் ஹேசில்வுட்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒருவாரம் தற்காலிகமாக நிறுத்திவைப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

இதையும் படிக்க: டெவால்ட் பிரேவிஸ், டெவான் கான்வே அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 231 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் தாயகம் திரும்பினர். ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்பட்டாலும், தேசிய அணிக்காக விளையாட வேண்டியிருப்பதால் வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அவர்களது அணியுடன் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக அந்த அணிக்காக விளையாடவில்லை. அவர் கடைசியாக ஏப்ரல் 27 ஆம் தேதி ஆர்சிபிக்காக விளையாடியிருந்தார். அதன் பின், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக வேண்டியிருப்பதால், அந்த அணி வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடவில்லை.

இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்காக ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விடியோவில் ஜோஸ் ஹேசில்வுட் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டு வாரங்கள் வீட்டில் இருந்தேன். பிரிஸ்பேனுக்கு சென்று பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டேன். நன்றாக இருப்பதாக உணர்கிறேன். மீண்டும் பந்துவீச்சில் ஈடுபட தயாராக இருக்கிறேன். நாளை பயிற்சியில் ஈடுபடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

இதையும் படிக்க: முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி நாளை மறுநாள் (மே 27) தனது கடைசி லீக் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஜோஸ் ஹேசில்வுட், 10 போட்டிகளில் 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிக்ஸர் மழை பொழிந்த கிளாசன், டிராவிஸ் ஹெட்; ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் மீண்டும் சாதனை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்... மேலும் பார்க்க

தோனியிடம் எப்போதும் கேட்கப்படும் கேள்வி; பதிலால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தோனியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றையப் போட்டியில... மேலும் பார்க்க

அபார வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்த சிஎஸ்கே!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கு... மேலும் பார்க்க

கொல்கத்தாவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ... மேலும் பார்க்க

டெவால்ட் பிரேவிஸ், டெவான் கான்வே அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 231 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ், ஸ்டாய்னிஸ் அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ப... மேலும் பார்க்க