செய்திகள் :

புதுக்கோட்டை: "ED-க்கு மட்டுமல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்" - உதயநிதி ஸ்டாலின்

post image

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

"புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுணக்கமாக நடைபெறும் பணிகள் கண்டறிந்து அதனை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ரூ.4.62 கோடி மதிப்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டு அதற்குப் பிறகு நிதி நெருக்கடியால் அப்பணி கிடப்பில் உள்ள நிலையில் தற்போது அந்தப் பணியை முழுமை செய்ய நான்கரை கோடி ரூபாய் தேவை என்று அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர். அதற்குரிய நிதியில் ரூ.3.50 கோடி தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். மீதமுள்ள ஒரு கோடியை சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து வழங்குவார்கள்.

udhayanithi stalin

வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நிறைவடைந்து விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். நிதி உரிமை கேட்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்யத் தான் செய்வார். ED -க்கு அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து, நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்போம். மிரட்டப் பார்த்தார்கள். மிரட்டி அடிபணிந்து பயப்படுவதற்கு அடிமைக் கட்சி கிடையாது தி.மு.க. கலைஞர் உருவாக்கிய தி.மு.க இது. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கையுடைய கட்சி. தப்பு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் அடிபணிய தேவையில்லை. பயப்பட வேண்டிய அவசியமும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டபூர்வமாகச் சந்திப்போம்" என்றார்.

``சார்கள், தம்பிகளின் ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது" - எல்.முருகன் கொதிப்பு

மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எல். முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பினாமிகளின் ஆட்சி நடக்கிறது. ஆட்சியை நடத்துவது முதலமைச்சரா அல்லது இந்தத் தம்ப... மேலும் பார்க்க

'பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்' - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் த... மேலும் பார்க்க

"சாதியை, சாதிய முரணை ஒழிப்பதற்கு ஆளுநர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்?' - தொல்.திருமாவளவன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையம் வ... மேலும் பார்க்க

பனைக்கனவுத் திருவிழா: "கள் அருந்தினால் தோல் மினுமினுப்பாக மாறிவிடும்" - சீமான் பேச்சு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி வட்டம் பூரிகுடிசை அருகே அமைந்துள்ளது நரசிங்கனூர் கிராமம். இப்பகுதியில் உள்ள பனையேறிகள் வெகு நாட்களாக கள்தடை நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி போராடி... மேலும் பார்க்க

Vijay: 'குடும்பத்துக்கு ஆபத்து வருமென அச்சமா முதல்வரே?' - திமுகவை கடுமையாக சாடும் விஜய்

'முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்!'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றதையும் டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறையின் ரெய்டையும் தொடர்புப்படுத்தி தவெக தலைவர் விஜய் தி... மேலும் பார்க்க

'கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டறியாமல் விளம்பரப்படுத்துவதா?' - வேலுமணி வருத்தம்!

கோவை அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலுமணி செய்தியாளர்களுக்கு... மேலும் பார்க்க