சுற்றுச்சூழல் புரவலா் விருது பெற்ற ஊராட்சித் தலைவருக்கு அமைச்சா் காந்தி வாழ்த்து
புதுச்சேரி டு விழுப்புரம்: `பைக் எப்படி ஓடுது?’ -பெட்ரோல் டேங்க்கில் மது கடத்தல்.. அதிர்ந்த போலீஸ்!
தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மதுபானங்களில் விலை குறைவு. அதனால் புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர், திண்டிவனம் போன்ற தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த குற்றப் பின்னணி கொண்ட சிலர், புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திச் சென்று விற்பது வழக்கம். அதன்படி விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் புதுச்சேரி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் விழுப்புரம் தனிப்படை போலீஸார் நேற்று மாலை, பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/laxov9o8/c3f4c02d-012c-40dc-a166-044611562d2c.jpg)
அப்போது புதுச்சேரியில் இருந்து வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். உடனே அவர்கள் வாகனத்தை திருப்பி அங்கிருந்து தப்பிக்க நினைத்தனர். ஆனால் அவர்களை மடக்கிப் பிடித்துவிட்ட போலீஸார், வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்தனர். தொடர்ந்து அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்வதற்காக, சென்டர் ஸ்டாண்டு போட்டு நிறுத்தும்படி போலீஸார் கூறினர். அப்போடு பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் குலுங்கும் சத்தம் வழக்கத்தைவிட அதிகமாகவும், வித்தியாசமாகவும் கேட்கவே அவர்களிடம் அதுகுறித்துக் கேட்டிருக்கின்றனர்.
அப்போது அவர்கள் சொன்ன பதில் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, பெட்ரோல் டேங்க்கை திறந்து பார்க்க முயன்றனர். அப்போது வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த பெட்ரோல் டேங்க்கினுள், மது பாட்டில்கள் இருப்பதைக் கண்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, `பெட்ரோல் எங்கடா ? பெட்ரோல் இல்லாமலா வண்டி ஓடுது ?’ என்று அவர்களிடம் கேட்டனர். அப்போது அவர்கள், `மது பாட்டில்கள் கடத்துவதற்காக பெட்ரோல் டேங்க்கை வடிவமைத்தோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/1bzj0ug5/153c260d-dfb6-4f6f-b16c-0613fe554e02.jpg)
சீட்டுக்கு அடியில் வேறு ஒரு பெட்ரோல் டேங்க் செய்து வைத்திருக்கிறோம். பல மாதங்களாக புதுச்சேரி மதுவை இப்படித்தான் கடத்தி வருகிறோம்’ என்று கூற, வாயடைத்துப் போயிருக்கின்றனர் போலீஸார். அதையடுத்து சந்துரு, சரவணன் என்ற அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் கடத்தி வந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.