செய்திகள் :

புதுச்சேரி: பிறந்த நாள் மது விருந்தில் தகராறு - மாணவரை `ரெஸ்டோ' பார் ஊழியர் கொலை செய்த பின்னணி

post image

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னுடன் பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரியில் படித்த தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நண்பர்களை புதுச்சேரிக்கு அழைத்திருக்கிறார் ஷாஜன். அதையடுத்து புதுச்சேரிக்கு வந்த அவர்களுடன், நேற்று நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள நடனத்துடன் கூடிய OMG (Oh My Gulp) என்ற ரெஸ்டோ பாரில் மது அருந்தியிருக்கிறார்.

ரெஸ்டோ பப்

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள், ஷாஜன் தரப்பினரை வெளியேற்றுமாறு நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனால் அங்கிருந்த பவுன்சர்களும், ஊழியர்களும் அவர்களை பாரில் இருந்து சுமார் 12:30 மணியளவில் வெளியேற்றி உள்ளனர். அதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் தங்களை ஏன் வெளியேற்றினீர்கள் என பவுன்சர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலாக மாறியது. அதில் கோபமடைந்த பார் ஊழியர் அசோக்ராஜ், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஷாஜனின் நண்பரான சண்முகப் பிரியனை குத்தியிருக்கிறார். அப்போது தடுக்க வந்த ஷாஜனையும் அதே கத்தியால் குத்தினார். அதில் இருவரும் சம்பவ இடத்திலயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்திருக்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெரிய கடை போலீஸார், ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஷாஜன்

அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சண்முகப் பிரியன் இறந்துவிட்டதாகக் கூறி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஷாஜனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து கொலை செய்த அசோக்ராஜ் உள்ளிட்ட ஊழியர்கள், பவுன்சர்கள் உள்ளிட்ட 8 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெஸ்டோ பார்கள் இரவு 12 மணியுடன் மூட வேண்டும் என்ற உத்தரவை மீறி, விடிய விடிய நடனத்துடன்  நடத்துவதுதான் இப்படியான சம்பவங்களுக்கு காரணம் என குற்றம் சுமத்துகின்றனர் புதுச்சேரி மக்கள்.

`காதல் என்ன சாதியைப் பார்த்து வருவதா?' - இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்!

சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, "இன்ஸ்டாவில் வரக் கூடிய தராதரம் இல்லாத ஆட்கள... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: `அரை நிர்வாண நடனத்துடன் ஹெராயினும் புழங்குகிறது’ - சாடும் திமுக

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியரால் தமிழகத்தைச் சேர்நத கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம், கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளிய... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: 'கல்லூரி மாணவரைக் கொலை செய்தது ஏன்?’ - ஊழியர்கள் வாக்குமூலம்

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: "பவுன்சர்கள் வைத்துக் கொள்ள அனுமதித்தது ஏன்?" - கோ.சுகுமாறன்

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு புதுச்சேரிக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர், கடந்த 9-ம் தேதி ரெஸ்டோ பார் ஊழியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்க... மேலும் பார்க்க

கூடலூர்: தொடர் கால்நடை வேட்டை; போக்கு காட்டும் புலி; கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை; பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேவர் சோலை சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக புலி நடமாட்டம் இருப்பதை மக்கள் பார்த்து வருகின்றனர்.தேயிலைத் தோட்டங்களில்... மேலும் பார்க்க

பெங்களூரு: குடும்பத்திற்குள் குறுக்கிட்ட மாமியார்; கொன்று 19 துண்டுகளாக வெட்டி வீசிய டாக்டர் மருமகன்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள தும்குரு மாவட்டத்தில் உள்ள சிம்புகனஹள்ளி என்ற கிராமத்தில் நாய் ஒன்று மனித கை ஒன்றை வாயில் கவ்வியபடி தெருவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த பொதும... மேலும் பார்க்க