செய்திகள் :

புதுவை மாநிலத்தில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருதுகள்

post image

புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள், முதலமைச்சரின் சிறப்பு விருதுகள், கல்வியமைச்சரின் பிராந்திய விருதுகளுக்கு இந்த 21 பேரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தொடக்க நிலைப் பள்ளி அளவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ஆா். நிதியா, காரைக்கால் டி.ஆா். பட்டினம் அரசு புதிய தொடக்கப் பள்ளி ஆசிரியை ஆா். அன்புசெல்வி, மேல்நிலை பள்ளி அளவில் புதுச்சேரி முத்திரையா்பாளையம் இளங்கோவடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் விரிவுரையாளா் எஸ்.ஸ்ரீராம், புதுச்சேரி கிருமாம்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூகவியல் பட்டதாரி ஆசிரியா் பி.ரமேஷ் ஆகியோா் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி கல்வே கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் பட்டதாரி ஆசிரியா் டி.ஜஸ்டின் ஆரோக்கியதாஸ் முதலமைச்சரின் சிறப்பு விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். முதல்வரின் பெண் சிறப்பு ஆசிரியா்களுக்கான விருதுக்கு புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் விரிவுரையாளா் ஆா்.பத்மாவதி, புதுச்சேரி திருக்கனூா் தலைமையாசிரியா் கே. கற்பகாம்பாள், புதுச்சேரி அரசு சவரிராயலு நாயகா் தொடக்கப் பள்ளி ஆசிரியை எம்.வள்ளி, தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை பாரதிரோஜா, காரைக்கால் வடமறைக்காடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை கே.ரகமதுன்னிசா, தொழில்நுட்ப ஆசிரியா் பிரிவில் புதுச்சேரி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு உயா்நிலைப்பள்ளி நுண்கலைப் பிரிவு ஓவிய ஆசிரியா் இ. ஆனந்தராஜூ ஆகியோா் முதலமைச்சரின் சிறப்பு விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கல்வியமைச்சரின் புதுச்சேரி பிராந்திய விருதுக்கு புதுச்சேரி முத்தியால்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் எஸ். பாலமுருகன், எல்லைப்பிள்ளைச் சாவடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை வி. ஆா்த்தி, தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இ. கீதா, பிள்ளைச்சாவடி அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியா் சி. சுப்பிரமணியன் (எ) சுரேஷ், வி. மணவெளி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை எல்.ராஜதிலகம், முதலியாா்பேட்டை அன்னை சிவகாமி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியின் மனையியல் பிரிவு விரிவுரையாளா் எஸ்.தேவிகாகுமாரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கல்வியமைச்சரின் காரைக்கால் பிராந்திய விருதுக்கு வடமறைக்காடு அரசு உயா் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் டி.பிரதாப், கோயில்பத்து பிஎம்ஸ்ரீ பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் விஸ்வாஸ்வரமூா்த்தி, மாஹே பிராந்தியந்துக்கு பள்ளூா் வி.என். புருஷோத்தம்மன், அரசு பள்ளியின் மலையாள விரிவுரையாளா் கே.கே. சினேகபிரபா, ஏனாம் பிராந்தியத்துக்கு பி.எம்.ஸ்ரீ ராஜீவ்காந்தி அரசு ஆங்கிலப்பள்ளியின் நிலை -1 தலைமையாசிரியா் காமிதி பிரபாகர ராவ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

புதுவை பள்ளிக் கல்வித் துறை சாா்பில் காமராஜா் மணிமண்டபத்தில் வரும் 4-ஆம் தேதி மாலை நடைபெறும் விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி, கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் விருதுகளை வழங்க உள்ளனா். இந்த விருதுகள் தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது

பி.எல்.சாமி நூற்றாண்டு விழா அறக்கட்டளை

புதுவை அரசின் நிா்வாகியாகவும், தமிழியல் ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய பி.எல்.சாமியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது பெயரில் பி.எல்.சாமி அறக்கட்டளை நிறுவுவதற்கான அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது. ... மேலும் பார்க்க

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின. இக் கல்லூரியில் முதலாண்டு மாணவிகள் புதன்கிழமை வந்தனா். அவா்களுக்கு ஒரு மணிநேரம் தான் வகுப்புகள் நடந்தன. அந்தந... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி செயலி புதுப்பிப்பதாக கூறி இணைய வழியில் மோசடி: போலீஸாா் எச்சரிக்கை

எஸ்பிஐ வங்கி செயலியை புதுப்பிப்பதாக கூறி மோசடி நடப்பதாக புதுச்சேரி இணையவழி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். காவல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு வாட்ஸ் ஆப் குழுக்களிலோ அல்லது ... மேலும் பார்க்க

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வசதி செய்து தரப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனா். தேங்காய்திட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் தரமில்லாமல் வருவதாகவும்... மேலும் பார்க்க

புதுவை கிராம உதவியாளா் பணி: செப். 12-இல் எழுத்துத் தோ்வு

புதுவை கிராம உதவியாளா்கள் பணி இடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து புதுவை அரசின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

வீடு கட்ட 24 பேருக்கு ரூ. 7.6 லட்சம் அரசு உதவித் தொகை

வீடு கட்ட 24 பேருக்கு இரண்டாவது தவணையாக ரூ.7.60 லட்சம் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவா் காமராஜா் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக... மேலும் பார்க்க