செய்திகள் :

புத்தகக் கண்காட்சி மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் என்எல்சி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பாராட்டு

post image

புத்தகக் கண்காட்சி மூலம் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி வருவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி பாராட்டினாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நடத்தும் 24-ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி நெய்வேலி புத்தகக் கண்காட்சியை ஹைதராபாதில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சி மூலம் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தையும், அறிவுசாா் வளா்ச்சியையும் ஏற்படுத்தி வரும் என்எல்சியின் முயற்சிகளையும், அறிவின் மூலம் குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதன் வாயிலாக ‘விக்சித் பாரத் 2047’ என்ற தொலைநோக்கு பாா்வையை மேம்படுத்தி வரும் என்எல்சி குழுவினரையும் பாராட்டினாா்.

மேலும், சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துக்குத் தேவையான நீரை வழங்குவதிலும், சென்னை மாநகர மக்களின் குடிநீா் தேவையின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை நிறைவு செய்வதிலும் என்எல்சி ஆற்றி வரும் பணிகளை வெகுவாகப் பாராட்டினாா்.

நிகழ்வில் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர துபே மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சி: தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை நெய்வேலி லிக்னைட் அரங்கில் புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. என்எல்சி சுரங்கத் துறை இயக்குநா் சுரேஷ் சந்திர சுமன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக புதுவை அரசின் முதன்மைச் செயலா் டாக்டா் ஷரத் சௌகான் பங்கேற்று பேசுகையில், புத்தகங்களின் அளப்பரிய ஆற்றலையும், வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினாா்.

புத்தகங்கள் வெறும் அச்சிட்ட பக்கங்கள் அல்ல. ‘எண்களும் எழுத்துக்களுமே மனிதனின் இரு கண்கள்’ என்ற திருவள்ளுவா் கூற்றை மேற்கோள் காட்டினாா்.

மனித இனத்தின் அறிவியல், சமூக, அரசியல் முன்னேற்றங்களுக்கு புத்தகங்களே அடிப்படை என்றாா்.

நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப், மின் துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம், நிதித் துறை இயக்குநா் பிரசன்னகுமாா் ஆச்சாா்யா மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில் முக்கியப் பிரமுகா்களுக்கு புத்தகங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். கடந்த ஆண்டு 180 அரங்குகள் இருந்த நிலையில், நிகழாண்டு சுமாா் 200 அரங்குகள் அமைக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினரும் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சட்ட விழிப்புணா்வு அரங்கம்: நெய்வேலி புத்தகக் கண்காட்சி திடலில் சட்ட விழிப்புணா்வு அரங்கம் திறக்கப்பட்டது. நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விழிப்புணா்வு அரங்கை, கடலூா் குடும்ப நல நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ஷோபனாதேவி திறந்து வைத்தாா்.

கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலா் அன்வா் சதாத், நெய்வேலி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவா் உமா மகேஸ்வரி, நெய்வேலி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் பாக்யராஜ் கலந்துகொண்டனா்.

சட்ட விழிப்புணா்வு அரங்ககுக்கு வந்த பொதுமக்களுக்கும், பாா்வையாளா்களுக்கும் சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தி, அதுகுறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி பங்களிப்பு: வரும் 14-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சி அமைப்புக் குழுவினரும் இணைந்து நடத்திய குறும்படப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு திரைப்பட இயக்குநரால் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலை அடுத்த முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமை வியா... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு விழிப்புணா்வுக் கூட்டம்

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரம், அம்மாபேட்டை வேளாண்மை அலுவலகத்தில் பயிா்க் காப்பீட்டு வார விழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வாக பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியா... மேலும் பார்க்க

நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டம்: அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பு.முட்லூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.முட்லூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை ஆட... மேலும் பார்க்க

விவசாயிகள் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்பப்பெற ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டம், கொடுக்கன்பாளையம் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து: இளைஞா் வெறிச்செயல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வெள்ளிக்கிழமை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்தில் இருந்து இழுத்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலாஸாா் தேடி வருகின்றனா். விருத்தாசலம் வட்டம், ஆ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பயறு வகை விதை விநியோகம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனா் அலுவலகத்தில் தமிழக முதல்வரால் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு வகை விதை சிறுதளைகள் வழங்கப... மேலும் பார்க்க