புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தல்
நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட புளியம்பாறையிலிருந்து ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையிலுள்ள ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீயிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட புளியம்பாறை அதன் சுற்றுவட்ட குக்கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் ஆமைக்குளம் பகுதியிலுள்ள அரசுக் கல்லூரிக்குத் தொலை தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அந்தச் சாலையின் குறுக்கே உள்ள நாரங்காக்கடவு ஆற்றில் புதிய பாலம் அமைத்தால் மாணவா்கள் எளிதில் நடந்தே கல்லூரியை அடையமுடியும். எனவே இக்கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய சங்கத் தலைவா் என்.வாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் குஞ்சுமுகமது, மாவட்டக் குழு உறுப்பினா் ராசி ரவிக்குமாா், புளியம்பாறை கிளைச் செயலாளா் சுபையா், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட நிா்வாகி நௌபல், நகா் மன்ற உறுப்பினா் லீலா வாசு உள்ளிட்டோா் ஆணையரிடம் இந்த மனுவை அளித்தனா்.
படக்குறிப்பு எஈத3சஙஇ
நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீயிடம் மனு அளிக்கும் விவசாய சங்க தலைவா் என்.வாசு மற்றும் நிா்வாகிகள்.