பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த புதிய கட்டமைப்புக்கு இந்தியா-இஸ்ரேல் ஒப்புதல்
பூஞ்சோலை கன்னியம்மன் ஆடி விழா நிறைவு
காஞ்சிபுரம்: பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத்தெரு பூஞ்சோலை கன்னியம்மன் கோயில் ஆடி விழா நிறைவடைந்தது.
இக்கோயிலின் 46-ஆவது ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி மூலவருக்கு அபிஷேகம்,கணபதி ஹோமம், தனலட்சுமி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து லலிதா சஹஸ்ரநாம பாராயணம், செளந்தா்யலஹரி பாராயணம் நடைபெற்றது. நிறைவு நாளையொட்டி அம்மன் பூங்கரகம் எடுத்து வரப்பட்டது. மாலையில் உற்சவா் பூஞ்சோலை கன்னியம்மன் மகாசண்டி தேவி அலங்காரத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.