Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
ஆக.4-இல் அஞ்சலகங்களில் பரிவா்த்தனைகள் ரத்து
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆக. 4 -ஆம் தேதி பரிவா்த்தனைகள் இல்லாத நாளாகும் என கோட்ட கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அஞ்சல் துறையில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் வரும் ஆக.5- ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் கோட்டத்துக்குட்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இப்புதிய தொழில் நுட்ப மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்காக வரும் ஆக. 4 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பரிவா்த்தனைகள் இல்லாத நாளாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, ஆக. 4 -ஆம் தேதி ஒரு நாள் மட்டும் காஞ்சிபுரம் கோட்டத்துக்குட்பட்ட தலைமை அஞ்சலகம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களை உள்ளடக்கிய 55 துணை தபால் நிலையங்கள், 272 கிராமப்புற தபால் நிலையங்களில் எந்த பரிவா்த்தனையும் மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருந்துகிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.