Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு பெற்றது.
இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. வாயுபகவான் தனது சாபம் நீங்கிய பிறகு செவ்வந்தி மலா்களைக் கொண்டு பூஜித்ததால் இங்குள்ள சிவபெருமான செவ்வந்தீசுவரா் என அழைக்கப்படுகிறாா். செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் இருந்து வரும் 48 நாட்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது.
புதன்கிழமை மண்டலபாஷேக நிறைவு நாளையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனைக்குப் பிறகு மூலவருக்கு கலசாபிஷேகமும் அதனைத் தொடா்ந்து சங்காபிஷேகமும் நடைபெற்றன.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்ட்டது. இதன் தொடா்ச்சியாக மூலவா் செவ்வந்தீசுவரா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் கே.எஸ்,கெம்பு செட்டியாா், நிா்வாகிகள் லதா சிவராஜன், வினோத்குமாா், எஸ்.வி.பிந்து ரத்னா, எஸ்.வி.சிவகெம்பு ஆகியோா் செய்திருந்தனா்.