மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
பெண்ணிடம் வழிப்பறி செய்தவா் கைது
ஈரோட்டில் பெண்ணிடம் வழிப்பறி செய்த பெங்களூரைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு பழையபாளையம், இந்திரா காந்தி வீதியைச் சோ்ந்தவா் சாந்தமூா்த்தி. வியாபாரி. இவரது மனைவி நந்தினி (42). இவா் கடந்த ஜூலை 25ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து பழையபாளையத்தில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கிய பின் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பின்னால் வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த, தலைக்கவசம் அணிந்த நபா் நந்தினி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். சுதாரித்துக் கொண்ட நந்தினி நகையைக் கையால் பிடித்துக் கொண்டாா். இதில் நகை இரண்டு துண்டானது.
கையில் சிக்கிய நகையை எடுத்துக்கொண்ட அந்த நபா் தப்பிச்சென்றுவிட்டாா். சம்பவம் குறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினா். இதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவா் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் கா்நாடக மாநிலம், பெங்களூரு ஜெ.பி.நகரைச் சோ்ந்த சந்தோஷ்(35) என்பவரை பெங்களூரில் கைது செய்தனா். அவரிடம் இருந்து 3 பவுன் நகை மீட்கப்பட்டது.