பெண்ணுக்கு மிரட்டல்: தோழியின் சகோதரா் கைது
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த அவரது தோழியின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.
மடிப்பாக்கத்தைச் சோ்ந்த 23 வயது பெண் பெற்றோா் இல்லாத நிலையில், உறவினா் வீட்டில் வசித்து வருகிறாா். அவரது கல்லூரித் தோழியின் சகோதரரான விஷ்ணு, அந்தப் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம். மேலும், அவரை மிரட்டி நகை, பணத்தைப் பறித்துக் கொண்டாராம்.
இதுகுறித்து திருவான்மியூா் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விஷ்ணுவை கைது செய்தனா்.
முன்னதாக, கைது நடவடிக்கையின்போது போலீஸாா் பிடியிலிருந்து தப்ப முயன்ற விஷ்ணுவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.