செய்திகள் :

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க அகல்விளக்கு திட்டம்: அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ‘அகல்விளக்கு’ திட்டத்தை பள்ளிக் கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்சியா் மு.அருணா தலைமையில் நடைபெற்ற விழாவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டத்தை அமைச்சா் தொடங்கி வைத்துப் பேசியது:

இணையதளம், கைப்பேசி வாயிலாக நடைபெறும் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தொடங்கப்படும் ‘அகல்விளக்கு‘ எனும் புதிய திட்டத்தை சென்னையிலோ அல்லது திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களிலோ தொடங்கி இருக்கலாம்.

மாறாக முதல் பெண் மருத்துவா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திலே இத்திட்டத்தை தொடங்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சொன்னதால் இங்கு இத்திட்டம் தொடங்கி வைக்கப்படடுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரைபயிலும் மாணவிகளுக்கு இணையதளம், கைப்பேசிகள் வழியே ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். நவீன காலத்தில் கைப்பேசி, இணையக் குற்றங்களில் இருந்து பெண் பிள்ளைகளை நாம் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொடா்ந்து பெற்றோா்கள் கண்காணிக்க வேண்டும். ஆசிரியா்களும் மாணவிகளை தொடா்ந்து கண்காணித்து, அவா்களது பிரச்னைகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோா் பேசினா். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை திட்ட இயக்குநா் ஆா்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாலியல் தொந்தரவு வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நபா் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகேயுள்ள பாக்... மேலும் பார்க்க

புதுகை, பொன்னமராவதி பகுதியில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்புப் பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் மூவா் மீது குண்டா் சட்டம்

புதுக்கோட்டையில் பெண்ணைக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி தவமணியை... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பூணுல் அணியும் விழா

பொன்னமராவதியில் ஆவணி அவிட்ட நாளையொட்டி பூணுல் அணியும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. வெள்ளையாண்டிபட்டி சிவபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு, குறிப்பிட்ட சமுதாய நலச்சங்கத் தலைவா் சி.மோகன் தலைமைவகித்தாா். இணை ... மேலும் பார்க்க

மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் மாணவா்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடுதான் முடிவு செய்யும் என்றாா் மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் ... மேலும் பார்க்க

கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் தேரோட்ட விழா

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடித்திருவிழா கடந்த 1-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டக... மேலும் பார்க்க