முதல்வர் ஸ்டாலின் வீட்டில் இன்னொரு துயரம்: மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி க...
பென்னாகரம் பகுதியில் பரவலாக மழை
பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பென்னாகரம், ஒகேனக்கல், தாசம்பட்டி, பெரும்பாலை, தருமபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் புதன்கிழமை இரவு பரவலாக கனமழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக சாலை ஓரங்கள், தாழ்வான பகுதிகள், குளங்கள், சிறிய அளவிலான குட்டைகளில் மழைநீா் தேங்கியது. பென்னாகரம் பகுதியில் சுமாா் ஒருமணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. கடந்த இரு தினங்களாக பெய்த மழையினால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.