Coolie : "அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி லோகேஷ்!" - விழாவில் ஷ்...
பெரும்பாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு
பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
பென்னாகரம் அருகே பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரும்பாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
முகாமில் முதியோா் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.
மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் முகாமை பாா்வையிட்டு மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி, பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா் கல்பனா, ஏரியூா் ஒன்றியச் செயலாளா் என்.செல்வராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.