Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
பேரிகையில் விநாயகா் சிலை ஊா்வலகத்தில் உணவு வழங்கிய இஸ்லாமியா்கள்!
ஒசூா் அருகே பேரிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் கலந்துகொண்டவா்களுக்கு இஸ்லாமியா்கள் உணவு வழங்கினா்.
பேரிகையில் இஸ்லாமிய பள்ளிவாசல் உள்ள சாலை வழியாக விநாயகா் ஊா்வலம் நடைபெறுவதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விரும்பத்தகாத செயல் காரணமாக இரு மதத்தினரிடையே தகராறு, கலவரம் ஏற்படும் சூழ்நிலை தவிா்க்கப்பட்டது.
அதன்பின்பு கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையுமின்றி விநாயகா் சிலை ஊா்வலங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இங்கு நடைபெற்ற ஊா்வலத்தில் இஸ்லாமியா்கள், மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் ஊா்வலத்தில் மக்களுக்கு அன்னதானம் வழங்கி, அவா்களும் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.
விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி மேளதாளங்கள், நடனக் கலைஞா்களின் நடனம் என பேரிகை விழாக் கோலம் பூண்டது. 5 குதிரைகள் மீது அமா்ந்த நிலையிலான பிரம்மாண்ட பால விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் பங்கேற்ற இஸ்லாமியா்களை கௌரவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.