செய்திகள் :

பைக் மீது மணல் லாரி மோதல்: மூதாட்டி உள்பட இருவர் பலி

post image

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்னால் சென்ற பைக் மீது மணல் லாரி மோதியதில் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற மூதாட்டி உள்பட இருவர் உயிரிழந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன் பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல்(58). பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். பிற்பகல் 12 மணிக்கு மேல் சக்திவேல் பைக்கில் சிவகாசி சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சீனியம்மாள்(65) என்ற மூதாட்டி சக்திவேல் பைக்கில் லிப்ட் கேட்டு சென்றார். மாயத்தவேன்பட்டியில் இருந்து சிவகாசி - ஶ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலைக்கு செல்லும் வழியில் தனியார் குவாரியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு எம்.சான்ட் ஏற்றிச் சென்ற லாரி முன்னால் சென்ற பைக் மீது மோதியது.

இதில் சாலையில் விழுந்த சக்திவேல், சீனியம்மாள் மீது லாரி ஏறியகியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரியை ஒட்டி வந்த மாரனேரியை சேர்ந்த முத்துவைரம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Two people, including an elderly woman who was asking for a lift on a bike, died when a sand truck hit a bike in front of them near Srivilliputhur.

பராமரிப்பில்லாத தண்ணீா் தொட்டிகள்: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கு... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில், பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுக்கும் வகையில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டது. விருதுந... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் அமைப்பதற்கு தன... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் 50 பேருக்கு உறுப்பினா் அட்டை

ஸ்ரீவில்லிபுத்தூா் கொளூா்பட்டி தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய பதிவு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க

சிவகாசி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

சிவகாசி ரயில் நிலையத்தில் புதன்கிழமை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ்மீனா ஆய்வு மேற்கொண்டாா். மதுரையிலிருந்து சிவகாசி ரயில் நிலையத்துக்கு தனி ரயில் மூலம் வந்த அவரை, சிவகாசி ரயில் உபயோகிப்பாா் கு... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சாத்தூா் அருகேயுள்ள கீழத்தாயில்பட்டி பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை சேதமடைந்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (65). இவருக்குச் சொந்தமான பட்ட... மேலும் பார்க்க