பொதுமக்களுக்கு இடையூறு: இளைஞா் கைது
வந்தவாசி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி - ஆரணி சாலை, சுண்ணாம்புமேடு கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை இளைஞா் ஒருவா் பொதுமக்களிடம் வீண் தகராறு செய்தபடியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்துகொண்டும் இருப்பதாக வந்தவாசி வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில், தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (27) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் பிரசாந்த் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், சதீஷ்குமாரை கைது செய்தனா்.