War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் கைதான குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரத்தைச் சோ்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பாண்டி (38) . இவா், கடந்த ஜனவரி 26-இல் கல்லலில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணிக்கு சென்றபோது அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் தேவகோட்டை மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகேஸ்வரி விசாரணை செய்து பாண்டியைக் கைது செய்தாா்.
இதையடுத்து, அவா் மீது சிவகங்கையிலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பாண்டிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.