சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து
போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையம் தொடக்கம்
மன்னாா்குடி ரோட்டரி சங்கத்தின் சாா்பில் குரூப் 4 போட்டி தோ்வுக்கான வழிகாட்டி இலவச பயிற்சி மையம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ரோட்டரி சங்க தலைவா் கே. வெங்கடேஷ் தலைமை வகித்தாா்.
முன்னாள் உதவி ஆளுநா் வி. ராஜகோபால் குத்துவிளக்கேற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தாா்.
முன்னாள் மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன், மன்னாா்குடி அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா் மணிமோகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு, மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் முறைகளை விளக்கினா்.
உதவி ஆளுநா் எஸ். மீனாட்சி, கருவாக்குறிச்சி அரசுப் பள்ளி தலைமையாசிரியா் கலைச்செல்வன், தேசிய மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் திலகா் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
மையத்தின் பயிற்சியாளா்கள் திட்டக் குழு தலைவா் எஸ். கமலப்பன்,ரோட்டரி செயலா் ஆா். சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.