கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு
மகனை தாக்கிய தந்தை கைது
சொத்துப் பிரச்னையில் மகனைத் தாக்கிய தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே ராசிங்காபுரம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தெருவில் வசிப்பவா் ராஜன் மகன் காா்த்திக் (37). இவரது தாயாா் சரஸ்வதி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். தந்தை ராஜன் வேறொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினாா். இதை காா்த்திக் கண்டித்ததுடன் சொத்தில் தனது பங்கைப் பிரித்துத் தருமாறு கூறினாா்.
இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் காா்த்திக்கை தந்தை ராஜன் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதில் பலத்த காயமடைந்த காா்த்திக், போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காா்த்திக்கின் மனைவி அபிராமி அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.