செய்திகள் :

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

post image

மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் எல்லையில், 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரின் நாரயணப்பூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள, மகாராஷ்டிராவின் கத்சிரோலி மாவட்டத்தில் உள்ள கோபார்ஷி வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு கடந்த ஆக.25 ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கத்சிரோலி காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் 2 குழுக்களும் இணைந்து அப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழைக்கு இடையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் இன்று (ஆக.27) காலை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையானது சுமார் 8 மணிநேரம் நீடித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் முடிவடைந்தவுடன், 3 பெண்கள் உள்பட 4 நக்சல்களின் உடல்களை, பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், கோபார்ஷி வனப் பகுதியில், நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் ஒரே நாளில் 380 மி.மீ. மழை! நூறு ஆண்டுகளில் அதிகபட்சம்!

4 Naxals have been shot dead by security forces on the border of Maharashtra and Chhattisgarh.

அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு: ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளைத் தேடும் வா்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வா்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமா்: ராகுல்

பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமா் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளாா் என்று ராகுல் காந்தி விமா்சித்தாா். பிகாா் மாநிலம் முஸாஃப... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு, அம்மாநில முதல்வர் பகவந்த் மானின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் வட ம... மேலும் பார்க்க

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா வரதட்சிணை வழக்கில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக, அக்குடும்பத்தின் மருமகள் புகார் தெரிவித்துள்ளார்.எரித்துக்க... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரில், புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்க... மேலும் பார்க்க

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக்கொன்ற தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மனைவி கடுமையான தீக்காயங்களுடன் தில்லியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... மேலும் பார்க்க