பெண்ணிடம் நகையைப் பறித்தவரை விரட்டிப் பிடித்து கைது செய்த போலீஸாா்
மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 49 கோடியைக் கடந்தது!
பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை(பிப். 13) வரையிலான நிலவரப்படி, கும்ப மேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் கலந்துகொண்டுள்ள பக்தர்கள் எண்ணிக்கை 49.14 கோடியைக் கடந்துள்ளது என்று உத்தரப் பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில்(இரவு 8 மணி நிலவரப்படி), 85.46 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.