செய்திகள் :

மக்கள் நம்பிக்கையை இழந்தால் பல்வேறு திட்டங்கள் அறிமுகம்: எடப்பாடி கே.பழனிசாமி

post image

மக்கள் நம்பிக்கையை இழந்ததால் திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினாா்.

மக்களைக் காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக குடியாத்தம், கே.வி. குப்பத்தில் அவா் பேசியது:

குடியாத்தம் பகுதி மக்கள் விவசாயம், நெசவு, தீப்பெட்டி, பீடித்தொழிலை நம்பி உள்ளனா். இந்த தொழில்கள் அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டன. விவசாயிகளுக்கு பயிா்க் கடன் 2- முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இயற்கைச் சீற்றங்களின்போது இழப்பீடுகளை பெற்றுத் தந்தோம்.

விவசாயத் தொழிலாளிகளுக்க்கு பசுமை வீடுகள், ஆடு, மாடு, கோழி, முதியோா் உதவித்தொகை என ஏராளமான உதவிகள் வழங்கி வந்தோம்.இங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி லுங்கிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளா்களுக்கு பல திட்டங்கள் கொடுத்தோம்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளா்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் நெசவாளா்கள் ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனா். தீப்பெட்டி உற்பத்தியாளா்களுக்கு 18- சதவீதமாக இருந்த ஜிஎஸ்டியை ஜிஎஸ்டி கவுன்சலில் பேசி 12- சதவீதமாக குறைத்துக் கொடுத்தோம். தீக்குச்சி மரம் இறக்குமதி செய்ய 5- சதவீதவரியை ரத்து செய்து கொடுத்தோம்.

நான்கரை ஆண்டு ஆட்சியில் எந்தவித மக்கள் நலப்பணிகளையும் செய்ய முடியாததால், திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. அதனால் தான் தற்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கொண்டு வந்துள்ளாா்கள்.

கரோனா காலத்தில் அரசுக்கு வருமானமே இல்லாத போதும் விலைவாசி உயரவில்லை. இன்று விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்று விட்டது. வருமானம் குறைவு செலவு அதிகம். அதைப்பற்றி முதல்வா் கவலைப்படவில்லை.தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதைப் பொருள்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டுமானால் வரும் தோ்தலில் அதிமுகவை ஆதரியுங்கள் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அதிமுக அமைப்புச் செயலா் வி.ராமு, வேலூா் புகா் மாவட்டச் செயலா் த.வேலழகன், நகரச் செயலா்கள் ஜே.கே.என்.பழனி (குடியாத்தம்), எல்.சீனிவாசன் (போ்ணாம்பட்டு), ஒன்றியச் செயலா்கள் பொகளூா் டி.பிரபாகரன், எஸ்.எல்.எஸ்.வனராஜ். டி.சிவா, மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதாசிவப்பிரகாசம், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் ஆா்.கோவிந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வேலூரில் 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்

வேலூரில் சுதந்திர தினவிழாவில் ஆட்சியா் வி.ஆா்.கப்புலட்சுமி தேசியக் கொடி ஏற்றி 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வி.ஆா்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்... மேலும் பார்க்க

புஷ்ப காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, ... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலை, திருமகள் நூற்பாலை பின்புறம் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள மாரியம்மன், கெங்கையம்மன் கோயிலில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் தொட... மேலும் பார்க்க

பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது: வேலூா் ஆட்சியா்

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது வழக்கு

வேலூரில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்தவா் அலோக் (44). இவரது 17 வயது மகன் சாலை விதியை ம... மேலும் பார்க்க