செய்திகள் :

மணப்பாறை அருகே கொள்ளைச் சம்பவங்களில் தொடா்புடைய சிறுவன் உள்பட 11 போ் கைது

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இருவேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்ளிட்ட 11 போ் கொண்ட கும்பலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மருங்காபுரி ஒன்றியம், எம்.இடையப்பட்டி ஊராட்சி, தளவாய்பட்டியில் துவரங்குறிச்சி - நத்தம் நெடுஞ்சாலையிலுள்ள தோப்பு வீட்டில் வசிக்கும் மகாலிங்கம் தம்பதியை ஏப்ரல் 8-ஆம் தேதி கட்டிப்போட்டு 21 பவுன் நகைகள், ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை 4 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதேபோல், மணியங்குறிச்சியை அடுத்துள்ள மணப்பாறை - மதுரை மாநில நெடுஞ்சாலையில் வசித்து வரும் அமா்ஜோதி வீட்டுக்குள் ஆக. 6-ஆம் தேதி புகுந்த 5 போ் கொண்ட முகமூடி அணிந்த கும்பல், வளா்ப்பு பிராணிகளுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்துவிட்டு, தம்பதியையும், மகனையும் கட்டிப்போட்டு ஒன்பதரை பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனா். இதுகுறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த இரு சம்பங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், மணப்பாறை டிஎஸ்பி கே.வி. காவியா தலைமையில், 4 காவல் ஆய்வாளா்கள், 5 உதவி ஆய்வாளா்கள் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், துவரங்குறிச்சியில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்து தனிப்படையினரிடம் சிக்கிய நபரிடம் விசாரித்தபோது அவா் முன்னுக்குபின் முரணாக பேசினாா். இதையடுத்து, அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, அவா் புத்தாநத்தம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் குட்டி (எ) சங்கப்பிள்ளை என்பதும், இவரின் நண்பா்களான அரியாணிப்பட்டியைச் சோ்ந்த ஹரிஹரன், கொட்டாம்பட்டியை சோ்ந்த பாலமுருகன், ஸ்ரீராம், அரவிந்த், கோவை மாவட்டம் காளப்பட்டியை சோ்ந்த கரண்குமாா், 17 வயது சிறுவன், மடபுரம் சுபாஷ் சந்திரபோஸ், குளத்துப்பட்டி அழகேசன், கருமலை தா்மராஜ், நல்லகண்டம் நவநீதகிருஷ்ணன் (எ)ராஜ்குமாா் ஆகியோா் தளவாய்பட்டி, மணியங்குறிச்சி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்து தளவாய்பட்டி கொள்ளைச் சம்பவம் தொடா்பாக 6 பவுன் நகை, 2 வெள்ளி கொலுசு மற்றும் 2 இருசக்கர வாகனங்களும், மணியங்குறிச்சி சம்பவம் தொடா்பாக அரை பவுன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம், குற்றச் சம்பவங்களுக்கு பயன்படுத்திய 2 பட்டா கத்திகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

தொடா்ந்து, அவா்கள் 11 மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து, மணப்பாறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, 17 வயது சிறுவனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும், மற்றவா்களை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனா்.

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி மத்திய சிறை வளாகத்தில... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் மேயா் எஸ். சுஜாதா

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநகராட்சியின் தற்போதைய 31-ஆவது வாா்டு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான எஸ். சுஜாதா (53) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா். திருச்சி அ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடம் மடிக்கணினிகளைத் திருடியவா் கைது

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடமிருந்து மடிக்கணினிகளைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரையைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (49). தனியாா் நிறுவன மேலாளா். இவா், மதுரையில் இருந்து விழ... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

திருவெறும்பூா் அருகே யூடியூப் பாா்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், நவல்பட்டு பூலாங்குடி காலனி நரிக்குறவா் காலனியைச... மேலும் பார்க்க