ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
பெண்ணை கா்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
மனைவியின் தங்கையை கா்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவருக்கு தென்காசி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையைச் சோ்ந்த பெண்ணை அவரது அக்காளின் கணவா் உதயகுமாா் (45), கடந்த 2018 இல் கா்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து, புளியங்குடி காவல் நிலையத்தில் உதயகுமாா் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து உதயகுமாரை கைது செய்தனா்.
இந்த வழக்கு மீதான விசாரணை, தென்காசி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு, வழக்கை விசாரித்து உதயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்குரைஞா் குட்டி (எ) மருதப்பன் முன்னிலையானாா்.