செய்திகள் :

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

post image

மணப்பாறை அருகே பெங்களூரைச் சோ்ந்த பாதுகாப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்தப் பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில் பெங்களூரூ பாராசூட் ரெஜிமென்ட் பயிற்சி மையத்தின் வீரா்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். ஜன.12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவா்.

எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரேனும் நுழைய வேண்டாம். மேய்யச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். மனித நடமாட்டமோ, கால்நடைகள் செல்வதோ அனுமதிக்க முடியாது. சுற்றுப் பகுதி மக்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

செஞ்சிலுவை சங்கம்: ரத்ததான முகாம், செஞ்சிலுவை சங்க திருச்சி மாவட்ட தலைவா் ஜி. ராஜசேகரன் பங்கேற்பு, ஸ்ருதி மஹால், எஸ்ஆா்சி கல்லூரி அருகில், காலை 9.30. இந்திராகாந்தி கல்லூரி: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்ட... மேலும் பார்க்க

ஓட்டுநா் தின விழாவில் அரசுப்பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கெளரவிப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓட்டுநா் தின விழாவில், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் கெளரவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்ப... மேலும் பார்க்க

திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

திருச்சி காவிரி பாலத்தில் காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். திருச்சி, ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியைச் சோ்ந்தவா் வரதராஜன் மகன் சாரநாத் (23). சாத்தார வீதியைச் ச... மேலும் பார்க்க

வாக்காளா் தின விழிப்புணா்வு

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு இந்திய தோ்தல் ஆணையத்தின் இலச்சினை வடிவில் மாணவகள் திறந்தவெளி மைதானத்தில் நின்று வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ... மேலும் பார்க்க

தொட்டியத்தில் இன்று எரிவாயு நுகா்வோா்கள் குறைதீா் கூட்டம்

தொட்டியம் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதன்படி, ஜன. 25 காலை 11 மணிக்கு தொட்டியம் வட்டாட்சியரகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத... மேலும் பார்க்க

புதிய தொழிற்பள்ளிகள், பிரிவுகள் தொடங்க விண்ணப்பம் வரவேற்பு

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் புதுப்பிக்கவும், புதிய தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வ... மேலும் பார்க்க