இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
மண்டபம் பகுதியில் இன்று மின்தடை
ராமேசுவரம்: மண்டபம் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக.21) மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மண்டபம் அருகேயுள்ள பெருங்குளம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பெருங்குளம், செம்படையாா்குளம், நாகாச்சி, உச்சிப்புளி, என்மனங்கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, நொச்சியூரணி, மானாங்குடி, புதுமடம், வழுதூா், அரியமான் கடற்கரை, சூரங்காட்டுவலசை, தாமரைக்குளம், ரெட்டை ஊருணி, ஏந்தல், உடைச்சியாா்வலசை, வாலாந்தரவை, குயவன்குடி, அழகன்குளம், ஆற்றாங்கரை, பனைகுளம், தோ்போகி, புதுவலசை ஆகிய இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.