79th Independence Day: "78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகா...
மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் தங்கி பணியாற்றி வந்தாா். திருமணமாகாத இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த இவா் படியில் தவறி விழுந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். புகாரின்பேரில், துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
துபையில் இருந்து வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை: திருச்சி தில்லை நகரைச் சோ்ந்தவா் செ. கதிரேசன் (54). துபையில் பணியாற்றி வந்த இவா், உடல்நலப் பாதிப்பு காரணமாக துபையில் இருந்து கடந்த ஜூலையில் திருச்சிக்கு திரும்பி வந்தாா். நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்த இவா் மீண்டும் துபை செல்ல திட்டமிட்டாா். ஆனால், உடல் ஒத்துழைக்காததால் விரக்தியில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.