தேசிய இளைஞா் விண்வெளி அறிவியல் மாநாடு: சிவகாசியில் ஆக.15-இல் தொடக்கம்
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாக புகாா் எழுந்த நிலையில், இது தொடா்பான விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் அதிகாரிகளின் கடவுச் சொற்களை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்னையில் கைது செய்யப்பட்ட மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தை மதுரைக்கு அழைத்து வந்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜபடுத்துவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைகளுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு சர்க்கரை அளவு கூடுதலாக இருந்ததுடன் அதிகளவிற்கான இரத்த அழுத்தம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.