மத்தியப் பிரதேசம்: புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்
மத்தியப் பிரதேசத்தில் புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றி, தனது உயிரை வளர்ப்பு நாய் ஒன்று தியாகம் செய்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே சிவம் பர்கையா தனது வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெப்பர்ட்டையும் அழைத்துக்கொண்டு நடைப்பயணம் சென்றிருக்கிறார். அப்போது காட்டில் இருந்து அவரை நோக்கி புலி ஒன்று வந்துள்ளது.
உடனே இதைக்கண்ட அந்த நாய் குரைத்து, குரைத்து உரிமையாளரிடம் புலியை நெருங்கவிடாமல் செய்துள்ளது. பின்னர் அந்த புலி, நாயின் மீது பாய்ந்து அதை காட்டை நோக்கி இழுத்துச் சென்றது. சிறிது நேர சண்டைக்குப் பிறகு, நாயை விட்டுவிட்டு புலி காட்டுக்குள் மறைந்தது. இதில் அந்த நாய்க்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.
சிறுமலையில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி - திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
பர்கையா காயமடைந்த தனது செல்லப்பிராணியை உடனடியாக மாவட்ட தலைமையகத்தில் உள்ள கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றார். ஆனால் அந்த நாய் சில மணிநேரங்களில் இறந்தது. புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்ற தனது உயிரைவிட்ட அந்த நாயின் தைரியத்தை கிராம மக்கள் பாராட்டினர்.