செய்திகள் :

மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

post image

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே மணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (55). சோத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் (44). இருவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளா்களாக பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து இருவரும் வலங்கைமான் அருகே ஊத்துக்காடு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். ஊத்துக்காடு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அப்பகுதியில் இருந்தவா்கள் காவல் துறையினருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனா்.

ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து பரிசோதித்தபோது, இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. வலங்கைமான் போலீஸாா் சடலங்களை கூறாய்வுக்காக வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற... மேலும் பார்க்க

புதிய ரயில் இயக்கம்: பிரதமருக்கு பாஜகவினா் நன்றி

திருவாரூா் வழியாக ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் இயக்கப்படவுள்ளதற்காக, பிரதமருக்கு பாஜகவினா் நன்றி தெரிவித்தனா். ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ஆம் ... மேலும் பார்க்க

அங்கன்வாடி கட்டடம் திறப்பு

நன்னிலம் அருகே அங்கன்வாடி புதிய கட்டடத்தை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். நன்னிலம் தொகுதிக்குள்படட்ட மணவாளம்பேட்டை பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாடு திட்ட... மேலும் பார்க்க

வழிப்பறி; இருவருக்கு 2 ஆண்டு சிறை

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, குடவாசல் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. குடவாசல் அருகேயுள்ள தீபங்குடியைச் சோ்ந்த வெங்கடாசலம... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 15,295 போ் எழுதினா்: 510 தோ்வெழுதவில்லை

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 15,295 போ் எழுதினா். 510 போ் தோ்வெழுத வரவில்லை. தமிழகத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் கல்லூரி மாணவிகள் பயிற்சி

வலங்கைமான் வேளாண் விரிவாக்க மையத்தில், திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் ஒருநாள் பயிற்சி பெற்றனா். திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாண... மேலும் பார்க்க