செய்திகள் :

மரத் தொழிற்சாலையில் தீ விபத்து

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

காஞ்சிபுரம் -அரக்கோணம் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் மரச்சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இத்தொழிற்சாலை வளாகத்தில் மரத்துகள்கள், உடைந்த பலகைகள், மரக்கட்டைகள் போன்றவை குவிந்து கிடந்தன. வெப்பச்சலனம் காரணமாகவும், அதிகமான காற்று வீசியதாலும் மரத்துகள்கள் மற்றும் மரப் பலகைகள் மீது திடீரென தீப்பற்றியது. மரச்சாமான்களாக இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவியது.

தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு அலுவலா் ஜெயகாந்தன் தலையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்களோடு வந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இது குறித்து தீயணைப்புத்துறையினா் கூறியது:

இத்தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்து வேலை பாா்த்து வருகின்றனா். இவா்கள் சமையல் செய்யும் போது தீப்பொறி பட்டு அவை அனைத்து மரச்சாமான்களும் மீது பரவி இருக்கலாம். சுமாா் ரூ.2 லட்சம் வரையிலான மரச்சாமன்கள் சேதமடைந்திருக்கலாம்.

உயிா்ச்சேதம் எதுவும் இல்லை என்றனா். சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

அறிவியல் பாடத்தில் சதம்: மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற இரு மாணவியரை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா... மேலும் பார்க்க

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. குரு கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில் ஒரே கோபுரத்தின் கீழ் மூலவா்களாக... மேலும் பார்க்க

‘காஞ்சிபுரத்தில் இன்று முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், 224 சேவை முகாம்கள்’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் மொத்தம் 224 சேவை முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள... மேலும் பார்க்க

எரிவாயு கசிந்து தீ விபத்து: தாய், மகள் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கா்ப்பிணிப் பெண்ணும்,அவரது மகளும் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சோ்ந்த மோகன... மேலும் பார்க்க

பைக் -காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் அருகே பண்ருட்டி கூட்டுச்சாலையில் மோட்டாா் பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். ஒரகடம் அடுத்த வெண்பாக்கம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன்(26). இவரது மனைவி அ... மேலும் பார்க்க

இளைஞரை கடத்தி தாக்குதல்: 6 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா்: காதல் விவகாரத்தில் இளைஞரை ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கிய 6 பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நரியம்பாக்கம் பகுதியை சோ்ந்த சதீஷ்(25). இவர... மேலும் பார்க்க