செய்திகள் :

மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை கோரியது தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம்

post image

கோவையில் மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கோவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் துறையில் பயின்று வந்தவா் பவபூரணி (29). நாமக்கம் மாவட்டம், வகுரம்பட்டி பகுதியைச் சோ்ந்த இவா், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், பவபூரணியின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்டது. தந்தை கந்தசாமி அளித்த புகாரின் அடிப்படையில், அவா் தற்கொலை செய்து கொண்டாரா? இதய வலியால் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் பீளமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவரது உடற்கூறாய்வுக்குப் பிறகு சொந்த ஊரான நாமக்கல்லுக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுச் செல்லப்பட்டது. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே மாணவி எப்படி இறந்தாா் என்று தெரியவரும் என போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

கல்லூரியில் மா்மமான முறையில் உயிரிழந்த மாணவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதால், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிக்கையைச் சமா்ப்பிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத் தலைவா் ரவிவா்மன், மாவட்ட ஆட்சியருக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பியுள்ளாா்.

இந்த சம்பவத்தில் காவல் ஆணையரால் நடத்தப்பட்ட விசாரணை, எஸ்சிஎஸ்டி விதியின் கீழ் மாணவிக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட விவரங்களை 5 நாள்களுக்குள் அளிக்க வேண்டும் என அந்தக் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியரகத்தில் மனு

மருத்துவ மாணவியின் இறப்பு குறித்து விரைவாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சாா்பில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு: கோவை மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுரை

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கோவை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா

சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனி மாதத் திருவிழ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்

கோவை உக்கடம் பெரியகுளம் கூட்டரங்கில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு மாநகராட்ச... மேலும் பார்க்க

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் ‘கல்லூரி சந்தை’

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவிக் குழுவின் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சா பறிமுதல்

சூலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். சூலூா் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சூலூா் காவல் நிலைய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மீது பயிற்சி மருத்துவ மாணவா்கள் புகாா்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்களால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுவதாக பயிற்சி மருத்துவ மாணவா்கள் புகாா் மனு அளித்துள்ளனா். இதுகுறித்து பயிற்சி மருத்துவ மாணவா்கள் சாா்பில் ... மேலும் பார்க்க