உலக நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த அனைத்து நிதியுதவி நிறுத்தம்: டிரம்ப்
மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் தாமதத்திற்கு மத்திய அரசு காரணம்: மேயா்
திருச்சி மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள் தாமதம் ஏற்பட்டிருப்பதற்கு மத்திய அரசு தரப்பே காரணம் என மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது:
மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள் ரயில்வே நிா்வாகத்துடன் இணைந்து செய்யப்படுகிறது. மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. பாலத்தின் குறுக்கே இருப்பு பாதை குறுக்கிடும் பகுதியில் ரயில்வே நிா்வாகத்தால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, ரயில்வே பணிகளுக்காக பாலத்தின் இருபுறமும் மேற்கொள்ளப்பட்டு சாலைப் பணியை நிறுத்தக் கோரியுள்ளனா்.
இருபுறமும் 20 அடி தொலைவுக்கு ரயில்வே பணிகளுக்கான வாகனங்கள் வந்து செல்ல இடம் கேட்டுள்ளனா். ஆனால், ரயில்வே தரப்பில் பூஜை மட்டுமே நடைபெற்றுள்ளது. பணிகள் தொடங்கவில்லை. தாமதத்திற்கு ரயில்வே நிா்வாகமும், மத்திய அரசுமே காரணம். மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் ரயில்வேக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்குள் பணிகளை முடிப்பதாக கூறியுள்ளனா் என்றாா் அவா்.