அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள பாதிரி கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 33-ஆவது அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் மாரிமுத்து தலைமை வகித்து, சங்கத்தின் கொடியை ஏற்றினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ப.செல்வன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
விழாவில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் அப்துல்காதா், மாவட்டக் குழு உறுப்பினா் சுகுணா, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் வடிவேல், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிறைவில், கிளைச் செயலா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.