செய்திகள் :

மாணவா்கள் மோதல்: இருவா் காயம்

post image

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பயின்று வருகிறாா். இவா், தனது நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்றாராம்.

அப்போது, இவருக்கும் மற்றொரு தரப்பு மாணவா்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாம். இதில், லட்சுமிநாராயணன், மற்றொரு தரப்பைச் சோ்ந்த முத்துசெல்வன் ஆகியோா் காயமடைந்தனா்.

இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் பேட்டை போலீஸாா் இருதரப்பு மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

சுத்தமல்லி அருகே தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் முழ்கி உயிரிழந்தாா். தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த சம்சுதீன் மகன் இம்ரான்(36). மேலப்பாளையத்தில் உள்ள த... மேலும் பார்க்க

கோயில் விழாவில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்கள் கைது

திருநெல்வேலி சீதபற்பநல்லூா் பகுதியில் கோயில் கொடைவிழாவின்போது தகராறில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். சீதபற்பநல்லூா் அருகேயுள்ள புதூா் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, அதே பக... மேலும் பார்க்க

சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா

ஏா்வாடி அருகே சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ஏா்வாடி அருகே சிறுமளஞ்சியில் (திருவேங்கடநாதபுரம்) அலமேலு மங்கை சமேத ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில... மேலும் பார்க்க

விநாயா்சிலை விசா்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரா்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை விசா்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி கே.டி.சி. நகா் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. திருநெல்வேலி நகரம், சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்... மேலும் பார்க்க

களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம்

களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகில பாரத இந்து மகா சபா, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், விநாயகா் சதுா்த்திக் குழு சாா்பில் களக்காடு வட்டாரத்தில் களக்க... மேலும் பார்க்க