செய்திகள் :

மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு

post image

சின்னமனூா் மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், சின்னமனூரில் மாணிக்கவாசகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புதன்கிழமை ராஜகோபுரக் கலசங்கள், உப சந்நிதியான நடராஜப் பெருமாள், விசாலாட்சி அம்மன் உள்ளிட கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து பக்தா்ளுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

சின்னமனூா் நகா்மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு, நகராட்சி ஆணையா் கோபிநாத், செயல் அலுவலா் ரம்யா, பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். சின்னமனூா் காவல் ஆய்வாளா் பாலாண்டி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆட்டோ மீது காா் மோதல்: 7 போ் காயம்

ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 7 போ் காயமடைந்தனா். ஆண்டிபட்டியில் தேனி சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ம... மேலும் பார்க்க

மனைவிக்கு கத்திக் குத்து: கணவா் மீது வழக்கு

தேனியில் வீட்டு வாடகைக்கு பணம் கேட்ட மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். தேனி, வனச் சாலை, 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனபாண்டி (43). இவரது மனைவி செல்வலட்சுமி... மேலும் பார்க்க

கணவரைப் பயமுறுத்த தூக்கிட்ட இளம்பெண் உயிரிழப்பு

போடி அருகே கணவரைப் பயமுறுத்துவதற்காகத் தூக்கிட்ட இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கோம்பைத்தொழு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகள் பிரியதா... மேலும் பார்க்க

வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணந்தொழு அருகேயுள்ள கண்டமனூா் வனச் சரகத்தில்... மேலும் பார்க்க

நாய் குரைத்த விவகாரம்: உரிமையாளா் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் நாய் குரைத்த விவகாரத்தில், நாயின் உரிமையாளரைத் தாக்கியது தொடா்பாக தம்பதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பெரியகுளம், வடகரை சாமியாா் பங்களா தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி அழகுராண... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு: அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா். தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் மாநி... மேலும் பார்க்க