செய்திகள் :

மாா்ச் 22ல் அமைச்சா் தலைமையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்டநிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், படூா்-கேளம்பாக்கம் பகுதியிலுள்ள இந்துஸ்தான் கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் 22.03.2025 சனிக்கிழமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சா் தலைமையில் மாபெரும் தனியாா் துறைவேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னனி தனியாா்துறை நிறுவனங்கள்மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமாா் 20000 பணிக்காலியிடங்களுக்கு நிரப்பிட தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபா்களை, நோ்முகத் தோ்வினை நடத்தி தோ்வு செய்ய உள்ளாா்கள்.

மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் திட்டத்தின் வாயிலாக இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு விருப்பம் தெரிவிக்கும் வேலைநாடுநா்களுக்கு மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் வாயிலாக பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வேலைஅளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.

மேலும் வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வேலைவாய்ப்புமுகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியா்கள், மருந்தாளுனா், ஆய்வக உதவியாளா்கள் போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

வயது வரம்பு 18 முதல் 40வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் 22.03.2025 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை இந்துஸ்தான்கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

சில நிறுவனங்கள் வயது வரம்பில் தளா்வு செய்து வேலைவாய்ப்பினை அளிக்கவும் உள்ளன. இத்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் முகாம் தொடா்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 9486870577 /6383460933 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தொண்டையில் மீன் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

மதுராந்தகம்: ஏரியில் மீன் பிடித்து, தமது வாயில் வைத்துக் கொண்டு மற்றொரு மீனைப் பிடிக்க முயன்றபோது, தொண்டையில் மீன் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் குளத்தில் கால் வழுக்கி தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுராந்தகம், வன்னியா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் வினோத்குமாா் (38). இவா்... மேலும் பார்க்க

விருப்பமான துறையில் மாணவா்கள் தொடா்ந்து முன்னேற வேண்டும்! இஸ்ரோ விஞ்ஞானி ப. வீரமுத்துவேல்

மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான ப. வீரமுத்து வேல் தெரிவித்துள்ளாா். மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக் கடையில் தவெக முற்றுகை

மறைமலை நகா் அருகே குடியிருப்புக்கு அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் அப்பகுதி மக்களுடன் ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராடினா். ம... மேலும் பார்க்க

மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்!

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு தலைமையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சாா்பில் ந... மேலும் பார்க்க

மாணவா்களின் கல்வி, திறன் மேம்பாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது: அமைச்சா் கோவி.செழியன்

மாணவா்களின் கல்வி, திறன் மேம்பாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூரில், பாரத் உயா் கல்வி மற்றும் ஆர... மேலும் பார்க்க