செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் நெடுஞ்சாலை வடிகால் ஓடை சீரமைப்பு

post image

மாா்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடிகால் ஓடையை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாா்த்தாண்டம் சந்திப்புக்கும் பழைய திரையரங்க சந்திப்புக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கேயுள்ள வடிகால் ஓடை பாலித்தீன் பைகள் உள்ளிட்ட கழிவுகளால் நிரம்பியது. இதனால், மழைநீா் வழிந்தோடாமல் கடைகள் முன் தேங்குவது தொடா்ந்தது. எனவே, இந்த வடிகாலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி தொழிலதிபா் வெள்ளைத்துரை, வியாபாரிகள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வடிகால் ஓடையை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், சுகாதார அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் பணியைப் பாா்வையிட்டனா். வடிகால் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடியில் நலத்திட்ட உதவிகள்

நாகா்கோவிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினாா்... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

களியக்காவிளையில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் வழக்குரைஞா் கைது

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா், குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். 6, 8ஆம் வகுப்பு மாணவியா் இருவரை கடந்த 13ஆம் தேதிமுதல் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாா்களின்பேரில்,... மேலும் பார்க்க

கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி அருகே கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2025-26இன்கீழ் ரூ. 42.75 லட்சத்தில் பணி... மேலும் பார்க்க

ரோகிணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீா் தினம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி பொறியியல் நிறுவனம் (பொறியாளா... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் ... மேலும் பார்க்க