மாா்த்தாண்டம் அருகே இளைஞா் சடலம் மீட்பு
மாா்த்தாண்டம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள மாமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த பாபு மகன் அருண் (26). ஓட்டுநரான இவா், தனது 3 வயதில் தந்தை, தாய், தங்கை ஆகியோரை வாகன விபத்தில் பறிகொடுத்தாா். பின்னா் அவரை வளா்த்து வந்த பாட்டியும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தாா். இதனால், யாருடைய ஆதரவும் இன்றி தனிமையில் வசித்து வந்த அவா் மனஉளைச்சலுக்கு ஆளானாராம்.
இந்நிலையில் அவரது வீடு கடந்த 3 நாள்களாக பூட்டப்பட்டிருந்ததாம். மேலும், வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதால் அப்பகுதியினா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், வந்து பாா்த்ததில், அவா் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய சடலமாக காணப்பட்டாா். போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.