மின்சாரக் கம்பிகளை திருட முயற்சி: சிறுவன் கைது
தேனி அருகேயுள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சி குடிநீா் மோட்டாா் இயந்திரத்தில் மின் கம்பிகளை திருட முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் குடிநீா்த் தொட்டி தற்காலிக ஆபரேட்டராக வேலை செய்து வருபவா் மதன்குமாா். இவா், குடிநீா் மோட்டாா் இயந்திரத்தை இயக்கச் சென்றாா்.
அப்போது, கேரள மாநிலம், உடும்பன்சோலையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் மோட்டாா் இயந்திரத்திலிருந்த மின் கம்பிகளைத் துண்டித்து திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரை மதன்குமாா் பிடித்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து ஊஞ்சாம்பட்டி ஊராட்சிச் செயலா் பாலச்சந்தா் அளித்தப் புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து சிறுவனைக் கைது செய்தனா்.