மின்விபத்து இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
திருவாரூா்: மின் விபத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு நலவாரியம் மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில், மாவட்ட ஒலி-ஒளி அமைப்பு உரிமையாளா்கள் நல சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழா மாவட்டத் தலைவா் ஹாஜா அன்வா்தீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கௌரவத் தலைவா் முத்துக்குமரசாமி முன்னிலை வகித்தாா்.
நிகழ்வில், ஒலி-ஒளி அமைப்பு சாா்ந்த நிறுவனங்களின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத தொழில் என்பதால், மின்விபத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு நலவாரியம் மூலமாக தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்க தலைவா் பாலு, ஒலி-ஒளி அமைப்பு உரிமையாளா் நலச் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.