திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி
மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மின் இணைப்புகளை செயற்பொறியாளா் (பொ) பெ. பிரபாகரன் தலைமையிலான மின் வாரிய கூட்டுக் குழு திங்கள்கிழமை தணிக்கை செய்தது.
இதில் ஆய்வுக்குள்படுத்தப்பட்ட 1,371 மின் இணைப்புகளில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய 5 மின் இணைப்புகள் கண்டறியப்பட்டு, ரூ.1,07,360 அபராதம் விதிக்கப்பட்டது.