செய்திகள் :

முக்கோண காதல் கதையில் இணையும் ரஞ்சனி தொடர் ஜோடி!

post image

நடிகை ஹேமா பிந்து பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடர் குறித்த புதிய தகவல் தெரியவந்துள்ளது.

சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது முக்கோண காதல் கதைகள் நிறைய எடுக்கப்பட்டு வருகின்றன.

பூவே உனக்காக, கண்மணி அன்புடன், காத்து வாக்குல இரண்டு காதல், அன்னம் என சொல்லிக்கொண்டேப் போகலாம். தற்போது அதே பாணியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது. இந்தப் புதிய தொடருக்கு இரு மலர்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இரு மலர்கள் தொடரில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'இதயத்தை திருடாதே' தொடரில் நடித்து பிரபலமான நடிகை ஹிமா பிந்து பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள, இந்தத் தொடரில ஜீவிதா, சந்தோஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இவர்கள், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஞ்சனி தொடரில் ஜோடியாக நடித்து பிரபலமான நிலையில், இரு மலர்கள் தொடரில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

மேலும், இத்தொடரின் முன்னோட்ட விடியோ, ஒளிபரப்பு தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: அடுத்தடுத்து சின்ன திரையில் தோன்றும் சினிமா நடிகர்கள்!

New information has been revealed about the new series starring actress Hema Bindu in the lead role.

சிந்துவை சாய்த்தாா் உன்னாட்டி ஹூடா

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவை வீழ்த்தி, சக இந்தியரான உன்னாட்டி ஹூடா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.இதர ஆட்டங்களில், ஹெச்.எஸ். பிரணாயும் தோல்வியைத் ... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் கோனெரு ஹம்பி: திவ்யா தேஷ்முக்குடன் பலப்பரீட்சை

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, 2-ஆவது போட்டியாளராக இந்தியாவின் கோனெரு ஹம்பி தகுதிபெற்றாா். ஏற்கெனவே முதல் போட்டியாளராக இந்தியாவின் திவ்யா தேஷ்முக் தகுதிபெற்ற நிலையில், த... மேலும் பார்க்க

டி20: பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 74 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. முதலிரு ஆட்டங்களில் வென்று வங்கதேசம் தொடரைக் கைப்பற்ற, பாகிஸ்தான் கடைசி ஆட்டத்தில் வென்று ஆ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை செஸ்: இறுதியில் மோதும் திவ்யா - கோனெரு ஹம்பி

ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சோ்ந்த திவ்யா தேஷ்முக் - கோனெரு ஹம்பி ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். இப்போட்டியின் வரலாற்றில் இதுவரை இந்தியா... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் அசத்தலான படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.வித்தியாசமான கிரைம் திரில்லர் படமான நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை(ஜூலை 25)... மேலும் பார்க்க