செய்திகள் :

"முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித் ஷாவிடம் தான் கேட்க வேண்டும்!" - டி.டி.வி.தினகரன்

post image

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,

"வரும் தேர்தலில் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பெயர்களை குறிப்பிடும் போது அ.ம.மு.க பெயரை குறிப்பிடாதது குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு பதில் கூற முடியாது. இது குறித்து யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் குறித்து அரசியல் கட்சி தலைவராக கருத்து கூறுவது நாகரிகமாக இருக்காது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. தி.மு.க ஆட்சி அமையும் பொழுதெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டு தான் போகும். தி.மு.க-வை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது, கூட்டு மந்திரி சபை தான் அமையும். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதிகாரம் பெறும் வகையில் மக்கள் முடிவெடுப்பார்கள்.

ttv dinakaran

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித்ஷா விடம் தான் கேட்க வேண்டும். தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நாங்கள் நேரம் கேட்கவில்லை. எங்கள் கூட்டணி மேலும் வலுவடையும். கூட்டணி வலுவடைவதை பார்த்து தி.மு.க-வினருக்கு அச்சம் வந்து விட்டது. அன்வர் ராஜா எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் பயணித்தவர். அவர் தி.மு.க-விற்கு சென்றது எனக்கு வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில தனி நபர் வருமானம் உயர்ந்ததற்கு காரணம் இந்தியா முழுவதும் நிகழ்ந்த வளர்ச்சி தான்" என்றார்.

Azhapula: "வீர சகாவே... வீர சகாவே" - வி.எஸ்., இறுதிச்சடங்கில் முழக்கமிட்ட 1-ம் வகுப்பு மாணவி!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் கடந்த திங்கட்கிழமை காலமானார். சிபிஎம்-ன் நிறுவனத் தலைவரான வி.எஸ்., உடல் புதன்கிழமை ஆலப்புழாவில் உள்ள வலியாச்சுடுகாட்டில் உ... மேலும் பார்க்க

FTA: மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா - இங்கிலாந்து! யாருக்கு என்ன லாபம்?

இந்தியா, இங்கிலாந்துக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மூன்று ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் க... மேலும் பார்க்க

`ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் அதிமுகவிற்கு நல்லதே நடக்கும்' - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

"எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது, வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதைப்போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச... மேலும் பார்க்க

'உங்களை சந்தித்தால் பாக்கியம் கிடைக்கும்!-அனுப்புநர் ஓ.பி.எஸ்; பெறுநர் மோடி; சந்திக்க வேண்டி கடிதம்!

பிரதமர் மோடி வருகிற ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் சில இரயில்வே திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கவிருக்கிறார்... மேலும் பார்க்க

Bihar SIR: "முட்டாள்தனமான அறிக்கை..." - தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடும் ராகுல் காந்தி

பீகாரில் `ஸ்பெஷல் இன்டன்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.இதில், 1987-க்குப் பின்னர் பிறந்தவர்கள் தேர்தல் அலுவலர்களிடம், பி... மேலும் பார்க்க