செய்திகள் :

Bihar SIR: "முட்டாள்தனமான அறிக்கை..." - தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடும் ராகுல் காந்தி

post image

பீகாரில் `ஸ்பெஷல் இன்டன்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.

இதில், 1987-க்குப் பின்னர் பிறந்தவர்கள் தேர்தல் அலுவலர்களிடம், பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் தேவையானவற்றைச் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் தாங்கள் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Bihar SIR - Election Commission - தேர்தல் ஆணையம்
Bihar SIR - Election Commission - தேர்தல் ஆணையம்

இன்னும் 4 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், இந்தப் பணிக்கு அவசர அவசரமாக ஒரு மாத காலம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டிருப்பதும், ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல் ஆணையம் கூறியிருப்பதும்தான் இங்குப் பிரச்னை.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

பா.ஜ.க தலைமையிலான மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பீகார் ஆளுங்கட்சி (JDU) எம்.பி கிரிதாரி யாதவ், இந்தப் பணி தங்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் ஆணையத்துக்கு நடைமுறை அறிவே இல்லை என்றும் வெளிப்படையாக விமர்சித்தார்.

மறுபக்கம், "மொத்தம் 52 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும்" என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

ஐக்கிய ஜனதா தளம் - கிரிதாரி யாதவ்
JDU MP Giridhari Yadav - கிரிதாரி யாதவ்

மேலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில், "இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் அல்லது வெளிநாட்டினருக்கு வழிவகுக்க வேண்டுமா?

அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் இதைப் பற்றி எல்லோரும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்" என்று தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இத்தகைய விளக்கத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "இதுவொரு தீவிரமான விஷயம். இந்தியத் தேர்தல் ஆணையம் தாங்கள் செயல்பட வேண்டிய அளவுக்குச் செயல்படவில்லை.

முட்டாள்தனமான அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மோசடி செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்ததற்கான 100 சதவிகித ஆதாரம் எங்களிடம் இருக்கிறது.

நாங்கள் அதைக் கண்டுபிடித்தோம். இந்த நாடகம் தொகுதி வாரியாக நடந்திருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இதிலிருந்து நீங்கள் தப்பிக்க நினைத்தால் நாங்கள் விடமாட்டோம்" என்று தேர்தல் ஆணையத்தை விமர்சித்தார்.Career: அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி; என்ன தகுதி வேண்டும்? யார் விண்ணப்பிக்கலாம்?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' - முழு விவரம்!

'அன்புமணி நடைபயணம்..'பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் 'உரிமை மீட்க தலைமுறை காக்க...' என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். அன்புமணிபாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்ப... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக ... மேலும் பார்க்க

``ISI முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி அதிமுக'' - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வக... மேலும் பார்க்க